இந்தியாவின் ஜனாதிபதி, ஸ்ரீமதி திரௌபதி முர்மு தேசிய பஞ்சாயத்து விருதுகளை வழங்கினார் மற்றும் பஞ்சாயத்துகளை ஊக்குவிப்பது தொடர்பான தேசிய மாநாட்டை புது தில்லியில் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, கடந்த சில தசாப்தங்களாக துரிதமான நகரமயமாதல் இடம்பெற்ற போதிலும், பெரும்பான்மையான மக்கள் இன்னமும் கிராமங்களிலேயே வாழ்கின்றனர். நகரங்களில் வசிப்பவர்கள் கூட எப்படியோ கிராமங்களுடன் இணைந்திருக்கிறார்கள். கிராமங்களின் வளர்ச்சியே நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.
3 அடுக்கு பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கிய 21 மாநிலங்கள் உள்ளன என்று மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஸ்ரீ கிரிராஜ் சிங் கூறினார். பஞ்சாயத்துகளில் 33% அரசியலமைப்பு விதிகளுக்கு அப்பால் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மீதமுள்ள மாநிலங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
விருது விவரங்கள்:



