May 12-13 ,2021 Current affairs Tamil PDF.
தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொது அறிவு தகவல்கள்.
Current affairs Tamil : 12-13 May 2021
1. சமீபத்தில் International Day of Argania எப்போது அனுசரிக்கப்பட்டது?
Ans: மே 10
2. சமீபத்தில் யாருக்கு லாரஸ் உலக விளையாட்டு வீரர் விருது 2021 வழங்கப்பட்டுள்ளது?
Ans: ரஃபேல் நடால்
3. எந்த கல்வி வாரியம் மாணவர்களின் மன-சமூக நலனுக்காக ''Dost for Life'' மொபைல் பயன்பாடு அறிமுகப்படுத்தியுள்ளது?
Ans: CBSE
4. ஐந்தாவது முறையாக ஸ்பானிஷ் கிராண்ட் பிரிக்ஸ் பட்டத்தை வென்றவர் யார்?
Ans: லூயிஸ் ஹாமில்டன்
குறிப்பு:-
ஸ்பானிஷ் கிராண்ட் பிரிக்ஸ் 2021 இல் முதல் 3 :
1) லூயிஸ் ஹாமில்டன் (மெர்சிடிஸ் கார் - யுகே)
2)மேக்ஸ் வெஸ்டாப்பன் (ரெட் புல் ரேசிங்-நெதர்லாந்து)
3) வால்டேரி போடாஸ் (மெர்சிடிஸ் பின்லாந்து)
5. சமீபத்தில் 'Elephant in the Womb' என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
Ans: கல்கி கோச்லின்
6. 'நியூயார்க் நகர சர்வதேச திரைப்பட விழா 2021 இல் சிறந்த நடிகருக்கான விருதை வென்றவர் யார்?
Ans: அனுபம் கெர்
குறிப்பு:-
'அனுபம் கெர் 2021 இல் நியூயார்க் நகர சர்வதேச திரைப்பட விழாவில்' பிறந்தநாள் வாழ்த்துக்கள் 'என்ற குறும்படத்திற்கான சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.
7. 'கோபால்கிருஷ்ண கோகலே' வின் பிறந்த நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?
Ans: மே 9
குறிப்பு:-
பிறப்பு: 9 மே 1866
8. டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான 'சுமித் மாலிக் மற்றும் சீமா பிஸ்லா' தகுதி பெற்றிருக்கிறார்கள், அவர்கள் எந்த போட்டியுடன் தொடர்புடையவர்கள்?
Ans: மல்யுத்தம்
குறிப்பு:-
டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற இந்தியாவிலிருந்து நான்காவது பெண் மல்யுத்த வீரர் என்ற பெருமையை சீமா பிஸ்லா பெற்றார்.
இந்திய மல்யுத்த வீரர் சுமித் மாலிக் பல்கேரியாவின் தலைநகரான சோபியாவில் நடைபெற்று வரும் உலக மல்யுத்த தகுதிப் போட்டியில் 125 கிலோ பிரிவில் இறுதிப்போட்டிக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
9. சமீபத்தில் கோவிட் -19 சிகிச்சைக்காக 2-DG' 'என்ற மருந்துக்கு DCGI ஒப்புதல் அளித்துள்ளது, இந்த மருந்தை உருவாக்கிய அமைப்பு?
Ans: DRDO
10. 'மாட்ரிட் ஓபன் மகளிர் ஒற்றையர் 2021' டென்னிஸ் போட்டியின் பட்டத்தை வென்றவர் யார்?
Ans: ஆர்யனா சபாலெங்கா
குறிப்பு:-
பெலாரஸின் அரினா சபாலெங்கா முதன்முறையாக உலகின் ஒற்றையர் வீரரான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்ட்டியை வீழ்த்தி பெண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றார்.
11. தேசிய தொழில்நுட்ப தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
Ans: மே 11
12. சமீபத்தில் தமிழகத்தின் புதிய அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டவர் யார்?
Ans: ஆர்.சண்முகசுந்தரம்
13. சமீபத்தில் எந்த யூனியன் பிரதேசம் ஒவ்வொரு கிராம வீடுகளிளும் குடிநீர் குழாய் இணைப்பை உறுதிசெய்து முதல் இடத்தில் உள்ளது?
Ans: புதுச்சேரி
14. சமீபத்தில் எந்த மாநிலத்தில் ஆன்லைன் வெள்ள அறிக்கை மற்றும் தகவல் மேலாண்மை அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது?
Ans: அசாம்
சில தகவல்கள்:
》பரியதன் சஞ்சீவானி திட்டம் தொடங்கப்பட்டது.
》ஒருனோடோய் என்ற திட்டத்தை தொடங்கப்பட்டது.
》தன்வந்தரி திட்டம்.
》இந்தியாவின் ஒரே தங்கப் புலி
15. ரிசர்வ் வங்கியால் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?
Ans: Jose J Kattoor
16. சமீபத்தில் 'Life in the Clock Tower Valley' என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
Ans: Shakoor Rather
17. MBBS மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை அறிமுகப்படுத்தப்படுவதை எந்த மாநில அரசு சமீபத்தில் அறிவித்தது?
Ans: ஜம்மு-காஷ்மீர்
18. ரேடியம் குழுமத்தின் சமீபத்திய ஆய்வின்படி, greenhouse gas வாயுவை அதிகம் வெளியேற்றும் நாடு எது?
Ans: சீனா
19. மாட்ரிட் ஓபன் 2021 டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்?
Ans: அலெக்சாண்டர் ஜூரேவ்
20. சமீபத்தில் 'Nature in a Globalised World: Conflict and Conservation' என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு?
Ans: இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (A.International Union for Conservation of Nature (IUCN))
21. எக்ஸ்ரேயில் கோவிட் -19 நோய் இருப்பதைக் கண்டறிய 'ஆத்மான் செயற்கை நுண்ணறிவு (Atman AI)' தொழிற்நுட்பத்தை உருவாக்கிய அமைப்பு?
Ans: DRDO
குறிப்பு:-
இந்த நுட்பத்தின் மூலம், கொரோனா முடிவுகளைக் கண்டறிய CT ஸ்கேன் செய்யவேண்டிய அவசியமில்லை. செயற்கை நுண்ணறிவை (AI) அடிப்படையாகக் கொண்ட இந்த மென்பொருள், அந்த நபருக்கு கொரோனாவின் அறிகுறிகள் உள்ளதா இல்லையா என்பதை எக்ஸ்ரே படத்திலிருந்து சில நிமிடங்களில் அறிந்துகொள்ள முடியும்.
DRDO செயற்கை அறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் மையம் (CAIR) 5 சி நெட்வொர்க் மற்றும் HCG உடன் இணைந்து 'Atman AI' முறையை உருவாக்கியுள்ளது.
22. 2022 ஆம் ஆண்டில் 'டாக் -1 மிஷன் டு மூன்' ('DOGE-1 Mission to Moon') எந்த விண்வெளி நிறுவனம் தொடங்கும்?
Ans: SpaceX
23. 'இந்தியா சார்பாக 2021 ஆர்க்டிக் அறிவியல் மந்திரி கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் யார்?
Ans: ஹர்ஷவர்தன்
குறிப்பு:-
2021 ஆர்க்டிக் அறிவியல் மந்திரி கூட்டத்தின் மூன்றாவது பதிப்பு.
முதல் இரண்டு ஆர்க்டிக் அறிவியல் மந்திரி 2016 அமெரிக்காவிலும், 2018இல் ஜெர்மனியிலும் நடைபெற்றது.
மூன்றாவது கூட்டம் 2021 ஜப்பான் மற்றும் ஐஸ்லாந்து நடத்தியது. ஆசியாவில் நடைபெறும் முதல் கூட்டம் இது.
ஆர்க்டிக் அறிவியல் மந்திரி கூட்டத்தின் தீம் 2021 : Knowledge for a Sustainable Arctic
24. 'அரபு உலக நோபல் பரிசு (ஷேக் சயீத் புத்தக பரிசு) 2021' வென்ற முதல் இந்திய பெண் யார்?
Ans: தஹெரா குத்புதீன்
25. சமீபத்தில் ‘Buddha in Gandhara' என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
Ans: சுனிதா திவேதி
