காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான 109 கிலோ பளுதூக்குதல் போட்டியில் லவ்பிரீத் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார்.
பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் 6ஆம் நாள், ஆண்களுக்கான 109 கிலோ பளுதூக்குதல் போட்டியில் லவ்ப்ரீத் சிங், கிளீன் அண்ட் ஜெர்க் சுற்றில் தேசிய சாதனை படைத்து வெண்கலப் பதக்கம் (lovepreet singh wins bronze medal commonwealth games award) வென்றார். இந்திய பெண்கள் ஹாக்கி அரையிறுதிக்கு 3-2 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தினர். ஆடவர் ஹாக்கியில், பூல் பி போட்டியில் இந்திய ஆண்கள் அணி 8-0 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது.
ஜூடோ பெண்களுக்கான 78 கிலோ பிரிவில் துலிகா மான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதியில் நியூசிலாந்தின் சிட்னி ஆண்ட்ரூஸை தோற்கடித்துள்ளார்.
குத்துச்சண்டையில், பெண்களுக்கான 45கிலோ-48கிலோ கால்இறுதியில் நிக்கோல் கிளைடை தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தார் நிது சிங்.
குத்துச்சண்டை வீரர் ஹுஸாம் உதின் முகமது ஃபெதர்வெயிட் பிரிவில் நமீபியாவின் ட்ரைகெய்ன் மார்னிங்கை தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தார்.
துலிகா மான் ஜூடோவில் மொரிஷியஸின் ட்ரேசி டர்ஹோனை எதிர்த்து 78 கிலோ கால் இறுதிப் போட்டியில் வென்று பெண்களுக்கான 78 கிலோ பிரிவில் அரையிறுதியை எட்டினார், அதே நேரத்தில் தீபக் தேஸ்வால் தனது 100 கிலோ ஆடவர் காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஹாரி லவல்-ஹெவிட்டிற்கு எதிராக தோல்வியடைந்தார்.
lawn bowls-ன் 2வது சுற்றில், இந்திய பெண்கள் ஜோடியான லவ்லி சௌபே மற்றும் நயன்மோனி சைகியா ஜோடி 23-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ஸ்காஷில், சுனய்னா சாரா குருவில்லா ஒற்றையர் பிளேட் பைனலில் கயானாவின் மேரி ஃபங்காஃபட் கையை எதிர்த்து வென்றார். 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றார்.
பதக்கப் பட்டியலில், ஐந்து தங்கம், ஐந்து வெள்ளி, நான்கு வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்களுடன் இந்தியா 6வது இடத்தில் உள்ளது.
காமன்வெல்த் போட்டியில் ஆடவருக்கான 109 கிலோ எடைப் பளுதூக்குதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்பிரீத் சிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
