World Doubles Squash Championships 2022.
உலக இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் கலப்பு இரட்டையர் மற்றும் மகளிர் இரட்டையர் சாம்பியன்ஷிப்பை தீபிகா பல்லிகல் முறையே சவுரவ் கோசல் மற்றும் ஜோஷ்னா சின்னப்பாவுடன் இணைந்து வென்றார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் சவுரவ் கோசலுடன் இணைந்த தீபிகா முதலில் 11-6, 11-8 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் அலிசன் வாட்டர்ஸ் மற்றும் அட்ரியன் வாலர் ஜோடியை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் வென்ற ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு, அவர் ஜோஷ்னா சின்னப்பாவுடன் இணைந்து மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் 11-9, 4-11, 11-8 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தைச் சேர்ந்த சாரா ஜேன் பெர்ரி மற்றும் அலிசன் வாட்டர்ஸை வென்றார். உலக இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் இந்தியா தங்கம் வென்றதில்லை, இந்தப் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை ஆகும்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இங்கிலாந்தின் டெக்லான் ஜேம்ஸ் மற்றும் ஜேம்ஸ் வில்ஸ்ட்ராப் ஜோடி வெற்றி பெற்றது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், இந்த ஆண்டுக்கான விழா நடைபெற்றது.
இந்தியாவின் முந்தைய சாதனை:
2014 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் இந்தப் போட்டியில் இந்தியா இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றது. 2016ஆம் ஆண்டு கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் தீபிகா, சவுரவ் ஜோடி தோல்வியடைந்தது. 2014 இல், ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில் சவுரவ் மற்றும் ரித்விக் பட்டாச்சார்யா தோல்வியடைந்தனர்.
