இ-சஞ்சீவனி (e-Sanjeevani).
ஆயுஷ்மான் பாரத் உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்களின் 4வது ஆண்டு விழாவையொட்டி, மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, ஒரு லட்சம் மையங்களில் இ-சஞ்சீவனி (e-Sanjeevani) தொலைத்தொடர்பு வசதியை தொடங்கி வைத்தார்.
About:
நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இப்போது சாதாரண குடிமக்களும் இ-சஞ்சீவனி டெலி-கன்சல்டேஷன் வசதி மூலம் நாட்டின் பெரிய மருத்துவர்களிடம் ஆலோசனைகளைப் பெற முடியும்.
இ-சஞ்சீவனி (e-Sanjeevani), பிரதமரின் எண்ணப்படி எளிய மற்றும் அணுகக்கூடிய சுகாதார சேவையை வழங்குகிறது. தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு தொலைத்தொடர்பு சேவைகள் மிகவும் முக்கியமானவை மற்றும் அனைவருக்கும் சுகாதார சேவைகளை அணுகுவதற்கு உதவியாக இருக்கும்.
