MEENDUM MANJAPPAI’ SCHEME
'மீண்டும் மஞ்சப்பை’ திட்டம்
தமிழ் நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலின், பல ஆண்டுகளாக மாநிலத்தில் அதிகளவில் பரவி வரும் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் துணிப்பைகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் ‘மீண்டும் மஞ்சப்பை’ (MEENDUM MANJAPPAI’ SCHEME) திட்டத்தை தொடங்கி வைத்தார்.
About :
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகளை பட்டியலிட்ட முதல்வர், அவற்றை துணி பைகளால் மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
பிளாஸ்டிக்கை தூக்கி எறிந்தால், அது மண்ணை மோசமாக பாதிக்கும் எனவும் அது சிதைவடைய பல ஆண்டுகள் ஆகும். மண்வளம் பாதிக்கப்பட்டால் விவசாயம் பாதிக்கப்படும். மேலும், கால்நடைகள் பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிட்டு இறக்கின்றன. பிளாஸ்டிக் கேரி பேக்குகளை நீர்நிலைகளில் வீசினால், அங்குள்ள உயிரினங்கள் பாதிக்கப்பட்டு, தண்ணீரும் மாசுபடுகிறது. எனவே பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதை தவிர்த்து மக்கும் பைகளை பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.