Type Here to Get Search Results !

பால் சககர் திட்டம் மத்திய உள்துறை அமைச்சர் தொடங்கிவைத்தார்..

பால் சககர் திட்டம்
DAIRY SAHAKAR SCHEME

அமுலின் 75வது நிறுவன ஆண்டைக் கொண்டாடுவதற்காக அமுல் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த விழாவில், மத்திய உள்துறை மற்றும் ஒத்துழைப்புத் துறை அமைச்சர் கலந்து கொண்டார் இந்த விழாவில் "Dairy Sahakar" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.



About : Dairy Sahakar


"from cooperation to prosperity" என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்க, இந்திய அரசின் கூட்டுறவு அமைச்சகத்தின் கீழ் NCDC  மூலம் மொத்தம் ரூ. 5000 கோடி முதலீட்டில் "Dairy Sahakar" திட்டம் செயல்படுத்தப்படும்.


இதன் கீழ், பசு வளர்ப்பு, பால் கொள்முதல், செயலாக்கம், தர உறுதி, மதிப்பு கூட்டல், பிராண்டிங், பேக்கேஜிங், சந்தைப்படுத்தல், பால் மற்றும் பால் பொருட்களின் போக்குவரத்து மற்றும் சேமிப்பு, பால் பொருட்கள் ஏற்றுமதி போன்ற நடவடிக்கைகளுக்கு தகுதியுள்ள கூட்டுறவுகளுக்கு NCDC மூலம் நிதியுதவி வழங்கப்படும்.  "விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்" (Doubling the farmers income) என்ற நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.


நாட்டில் பால் உற்பத்தித் துறையை வலுப்படுத்துவதற்கான தற்போதைய முயற்சிகளுக்கு இந்த பால் சஹாகர் (Dairy Sahakar) திட்டம் துணைபுரியும்.

Post a Comment

0 Comments

Ads