Ladakh Ignited Minds திட்டம் ஐ லடாக் பகுதி மாணவர்களுக்காக இந்திய இராணுவம் தொடங்கியுள்ளது.
லடாக் மாணவர்களுக்கு சிறந்த கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்காக, இந்திய ராணுவம் project Ladakh Ignited Minds: A Centre of Excellence and Wellness என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
About:
இந்திய இராணுவத்தின் சார்பாக, Fire and Fury Corps, இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) மற்றும் கான்பூரைச் சேர்ந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம்(NGO), தேசிய ஒருமைப்பாடு மற்றும் கல்வி மேம்பாட்டு அமைப்பு (NIEDO) ஆகியவற்றுடன் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
பின்தங்கிய லடாக் மாணவர்களுக்கு சிறந்த கல்வி நிறுவனங்களில் கல்வி கற்க வாய்ப்பளிப்பதற்காக அவர்களுக்கு சிறந்த பயிற்சி வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்திய இராணுவத்தின் Fire and Fury Corps, HPCL மற்றும் NIEDO ஆதரவுடன் லடாக் இளைஞர்களுக்கு முழுமையான பயிற்சி அளிக்கும்.
முதல் தொகுப்பில், 20 பெண்கள், லே மற்றும் கார்கில் மாவட்டங்களைச் சேர்ந்த 45 மாணவர்கள், JEE மற்றும் NEET நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி பெறுவார்கள்.