இந்திய அரசியலமைப்பின் 12 அட்டவணைகளை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள கீழே குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
PDF வேண்டும் என்றால் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த குறிப்பை 4 முறை படித்தால் போதும்.
எளிமையான குறிப்பு:-
மானங்கெட்டவனே உனனுக்கு ஊதியம் கொடுத்து பதவி பிரமாணம் செய்து ராஜ சபா உறுப்பினர்களுள் ஒருவனா உன்ன அனுப்பி பழங்குடி பகுதிகளை நிர்வாகம் செய்யுனு மிசோரம், மேகலாயா, அசாம், திரிபுரா பகுதிகளை கொடுத்து நீ பட்டியல் அடிப்படையில், அவங்களுக்கு தெரிஞ்ச மொழியில் பேசி அடிப்படை உரிமைகள் பாதித்தாலும் பரவாயில்லைன்னு நல்லது செய்வனு நினைச்சா நீ கட்சி தாவுனதால பஞ்சாயத்தும் நகராட்சியும் நாசமா போச்சு.
12 அட்டவணைகள்:
1. இந்திய மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதேசங்களின் பெயர் மற்றும் எல்லைகள்
2. ஊதியம் மற்றும் சிறப்புரிமைகள்.
3. பதவிப்பிரமாணம் , உறுதிமொழிகள்
4. தேர்ந்தெடுக்கப்ப்ட வேண்டிய ராஜ்ய சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை
5. பழங்குடி பகுதி நிர்வாகம்
6. பழங்குடி பகுதி அசாம், மேகாலயா, மிசோரம், திரிபுரா அகியவைகளின் நிர்வாகம் பற்றியது.
7. பட்டியல்கள் (மத்திய, மாநில, பொது)
8. அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்.
9. அடிப்படை உரிமைகள் பாதித்தாலும் நீதிபுணராய்விற்க்கு உட்படாது
10. கட்சித்தாவல் தடை
11. பஞ்சாயத்து அமைப்பு.
12. நகராட்சி அமைப்பு.
PDF view
Tamil GK Academy
Quick update current affairs Tamil..
Telegram- Join now
WhatsApp group- Join now
**(Telegram search- TAMIL GK ACADEMY )

